மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு சமயத்தில் புறநகர் எண்ணூர் பகுதியில் இயங்கி வரும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தேக்கி வைக்கப்பட்டு இருந்த எண்ணெய் கழிவுகள் வெள்ளநீரோடு கலந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடற்பரப்பில் பரவி அப்பகுதி மக்களை பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது. இதனால், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இது குறித்து, உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது. […]
மிகஜாம் புயல் வெள்ள நீரே இன்னும் சென்னை சுற்றுவட்டார புறநகர் பகுதியில் சில இடங்களில் வடியாமல் இருந்து வரும் நிலையில், எண்ணூர் பகுதியில் வசிப்போருக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி உள்ளது அப்பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவு. இந்த எண்ணெய் கழிவு சுமார் 21 கிமீ தூரத்திற்கு பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புகள் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் […]