பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்கள், ஈரான் நாட்டில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டும், இந்தியாவுக்கு திரும்புவதற்கு அனுமதி தரப்படாத நிலையிலும் அங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அவர்களில் 8 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தையும், 7 பேர் திருநெல்வேலி மாவட்டத்தையும், 6 பேர் தூத்துக்குடி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் அங்கு மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களாகும். ஈரான் நாட்டைச் […]