Edappadi Palanisami: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசியுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. இதன்போது கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் உடன் இருந்தனர். Read More – மக்களவை தேர்தல்..! விறுவிறுப்பாக நடைபெற்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் நேர்காணல் சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான […]
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இதன்பின் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுள்ளனர். குடும்ப அரசியல் நடத்தி கொடி பிடிக்கும் தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவின் வாடிக்கை. திமுகவை வீழ்த்துவதில் வெற்றி கண்ட எம்ஜிஆர் காட்டிய பாதையில் […]
பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]
புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என என்.எல். சி.நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு,ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும்,வீட்டு மனைகளுக்கு,ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும்,நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,மேலும்,மறு குடியமர்வுக்காக […]
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலும்,தங்கும் விடுதிகளிலும் சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறை நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் திமுக அரசு விடுவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் […]
தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை திமுக அரசு களைந்திட வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அம்மாவின் அரசில்,எப்படி கல் குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்றடைந்ததோ,அதன்படி தற்போதும் கல் குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த விடியா அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்,கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைந்திட வேண்டும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி […]
சென்னை:அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கீழ்க்கண்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர். பொள்ளாச்சி தெற்கு (கிழக்கு) ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஆகியோருடன் அதிமுகவினர் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக,இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது: “கழகத்தின் […]
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அதிமுக தலைமை ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.அதன்படி,காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி […]
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசு நிதி திமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் கை நழுவுகிறதா? என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சந்தர்ப்பவாத தி.மு.க. ஆட்சி: “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற முதுமொழியை நிதர்சனப்படுத்தும் பணியை பல ஆண்டுகளாகச் செய்துவந்த தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தற்போதைய சந்தர்ப்பவாத தி.மு.க. ஆட்சியில் செயலிழந்துபோய் நிற்பது வேதனைக்குரியதாக […]