கல்லூரி மாணவன் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தமிழ் நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, சமூக விரோத சக்திகளின் அட்டகாசமும், அடாவடித்தனமும், அரசு அதிகாரிகள் சமூக விரோதிகளாலும், ஆளும் திமுக-வினராலும் மிரட்டப்படுவது தொடர்கதையாகி உள்ளது. மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சியிலும், தொடர்ந்து அம்மாவின் அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்த […]