Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. […]
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, காந்தி நகர் பகுதியில் லவ்டேல் செல்லும் சாலையில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. “எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார் இந்த அடுக்குமாடு குடியிருப்பு சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. சுமார் 15 அடிக்கு மேலான உயரத்தில் தடுப்பு சுவரானது அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு […]
ஆனிக்கல் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம். – நீலகிரி மாவட்ட ஆட்சியர். உதகமண்டலம் (ஊட்டி) அருகே ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில், 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரவு […]
ஆனிக்கல் ஆற்றில் ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்களில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மழை வரத்து காரணமாக உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனடியாக […]
ஊட்டி ஆனிக்கல் காற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம். வடகிழக்கு பருவமழை இன்னும் ஓயாத காரணத்தால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் உபரி நீர் வெளியேறும் அளவும் அதிகரித்து வருகிறது. அப்படி உதகமண்டலம் ஆனிக்கல் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அப்போது நேற்று இரவு விழா முடிந்து பக்தர்கள் வீட்டிற்கு திரும்பும்போது, திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. […]
நீலகிரி முதல் கூடலூர் வரையில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்திற்கு (ஊட்டி) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வந்துள்ளார். அங்கு ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், ‘ மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நீலகிரி முதல் கூடலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று […]
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் இடையே மண்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனால் ரயில் பாதை முழுவதும் மூடப்பட்ட நிலையில், பாதையோரத்தில் […]
தோடர் இன மக்களின் கோயிலில் கூரை மாற்றும் திருவிழா நேற்று ஊட்டி அருகேயுள்ள பகல்கோடுமந்து பகுதியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் உட்பட பல்வேறு வகையான ஆதிவாசி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆதிவாசி இனமக்களும் தங்களுக்கு என தனி பாரம்பரிய உடை, இருப்பிடம், பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர். இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் 67 மந்துகளில் […]