உ.பி-யில் ஏற்கனவே 6 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 54 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த வாக்குபதிவில், 2.06 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,இதுவரை 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, இந்த தேர்தலானது 57 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி உ.பி 6-ஆம் கட்ட தேர்தலில் 53.31% வாக்குகள் பதிவாகியுள்ளது.