எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உழவர் சந்தைகளில் விளைபொருட்களின் நச்சுத்தன்மையை கண்டறிய, கருவிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. விளைபொருட்கள் தரமானதாக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென தமிழக வேளாண்மைத்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் ரசாயன பொருட்கள் தெளிப்பதாக புகார் எழுந்த நிலையில், உழவர் சந்தைகளில் உள்ள காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுக்கு கருவிகள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு கொண்டுவரப்படும் பழங்கள், காய்கறிகளில் நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக […]