ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட காட்பாடி மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தினரை எம்.பி தொல்.திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறி மாணவி திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளார்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் உள்ள மைனஸ் மார்க் எனப்படுவது மாணவர்களை அச்சுறுத்துகிறது. நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு […]
விடுபட்ட மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் உள்ளாட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், புதிதான உருவான மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டது என்றும் இதனால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, […]