ஜவாஹிருல்லா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது தமிழக முதல்வர் அவர்களே களத்தில் இறங்கி செயல்பட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, முதல்வரின் நிவராண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம். பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம்.? டெல்லி போலீசார் […]
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச […]
மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை விட, பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி அளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை. இன்று டெல்லில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, தீவிரவாதம் குறித்த தனது எதிர்ப்பை பலமாக பதிவு செய்தார். அவர் பேசுகையில், மக்களை அச்சப்படுத்தும் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. […]
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழாவை முடித்து விட்டு, தற்போது தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. இன்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவளவிழா ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். காலையில் இந்தியா சிமெண்ட்ஸ் விழாவை முடித்து கொண்டு தற்போது சென்னையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து குறிப்பில், ‘இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள், நல்ல ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். […]
உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், அனைத்து ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்றுமொழியென்றும், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளின் வினாத்தாள்களும் இந்தியிலேயே இருக்கும் […]
காஷ்மீர், ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் வருவதை ஒட்டி நேற்று காஷ்மீர் முழுக்க பல்வேறு இடங்களில் இன்டர்நெட் கட் செய்யப்பட்டது. இரண்டாவது நாளான இன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டார். 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் சென்றுள்ளார். பாதுகாப்பு கருதி பல்வேறு இடஙக்ளில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறைத்துறை டி.ஜி.பியாக பணியாற்றி வந்த 57 வயதான ஹேமந்த் குமார் லோஹியா நேற்று அவரது வீட்டில் கழுத்து அறுபட்டு உயிரிழந்தார். ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா எனும் பகுதியில் தங்கி இருந்த ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டு இருந்துள்ளார். தகவல் அறிந்து […]
பாதுகாப்பு வளையத்தை மீறி அமித்ஷாவை நெருங்க முயன்ற மர்ம நபர் பாதுகாவலர்களால் கண்டறியப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். அங்கு விநாயகர் கோவிலுக்கு பலத்த பாதுகாப்புடன் தரிசிக்க சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம நபர் அமித்ஷாவை நெருங்க முற்பட்டுள்ளார். சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கப்பட்ட அந்த நபரை பிடித்து விசாரிக்க தொடங்கினர். அதில், அவர் தன்னை ஆந்திர முதலவரின் பி.ஏ என கூறிக்கொண்டு உள்ளே […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில்,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா,மற்றும் மத்திய அமைச்சர்கள்,பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில்,தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சிக்கு ஆட்சியமைக்கும் எனவும்,அதைப்போல தென்னிந்திய மாநிலங்களான கேரளா,ஆந்திரா, ஒடிசா ஆகிய பிற தென்னிந்திய மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சி விரைவில் மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தேசிய செயற்குழு கூட்டத்தில் […]
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிதி வழங்கிட வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம். வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதாரங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கிட வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘2021 வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை […]