Birth Registration: பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிப்பு. குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது அந்த குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற […]
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது. நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.! அதே போல நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட […]
பேரிடர் மேலாண்மையில் சிறப்பான,தன்னலமற்ற சேவை ஆற்றியதற்காக குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம்,”சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு” தேர்வாகி இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு,குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மையில் சிறப்பான,தன்னலமற்ற சேவை ஆற்றியதற்காக குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனமானது “சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு” தேர்வாகி இருப்பதாக உள்துறை […]
தமிழகத்தில் திருவிழா,அரசியல் உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை, 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 27.5.2021 அன்று 36,000-க்கும் மேற்பட்ட அளவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது நாள் தோறும் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. […]