கடந்த 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியை ஆண்டின் தொடக்க நாளாக கருதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. தற்போது ஜனவரி மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அத்தனையும், அந்த நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியில் கடைபிடிக்கப்பட்டன. காரணம், அப்போதைய ஜூலியன் நாள்காட்டியில் ஏப்ரல் 1-ந்தேதி தான் ஆண்டின் தொடக்கமாக புத்தாண்டு தினமாக குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் 13-ம் கிரகரி என்ற போப் ஆண்டவர் ஜனவரி 1ஆம் […]
காசநோய் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் இது மிக அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் மைக்கோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். இந்த பாக்டீரியம் நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த டி.பியை […]
தண்ணீர்தான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்று இவ்வுலகில் ஏதுமில்லை. தண்ணீர் புவியில் கிடைக்கும் வற்றாத ஒரு செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் […]
இன்று நவீன மயமாக்குதல் என்ற பெயரில், உலகின் இயற்கை வளங்களை 90 சதவீதம் அழித்துவிட்டு, அதன் விளைவாய் தோன்றும் விளைவுகளான பல்வேறு பருவ கால மாறுபாடு காரணமாக பூமியில் மாழை பொய்த்துப்போய்விட்டது. இங்கு கிடைக்காத தண்ணீரை செவ்வாய் கிரகத்தில் தேடிக் கொண்டு இருக்கிறான் இன்றைய மனிதன்.நீர் சூழ் உலகாக மூன்று பங்கு கடல் இருந்தும், அதனை குடிநீராக்கும் சிந்தனையை விடுத்து, வேற்றுகிரக வாசியை தேடியே நம் அறிவியல் எல்லாம் வர்த்தகமயமாக்கப்பட்டு வருவதால், மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவைகளுக்கான […]
இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐநா பேரவைக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட 21-ம் நூற்றாண்டின் தீர்மானத்திற்கிணங்க 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ஆம் நாளும் உலக நீர்வள நாளாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நாளை கொண்டாடப்பட காரணம் என்னவென்றால், உலகில் நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் […]