ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என ப.சிதம்பரம் ட்வீட். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி […]
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. நாளை மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாளில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த் தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 30-ஆம் நாள் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சாதியப் பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட காந்தியடிகள் நினைவாகத் தீண்டாமை […]