திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே படவேடு சுற்றுப்புற பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலர் நேற்று முன்தினம் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பழங்காலத்தில் உலோகங்களை உருக்கிப் பொருட்கள் செய்ய பயன்படுத்திய பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். படவேட்டில் உள்ள தாமரை ஏரியின் தென்கரையில் இந்த உலோக உருக்குப் பாறை இருப்பதை கண்டறிந்தனர். இந்த பாறையில் சுமார் அரை அடி ஆழம் கொண்ட, 100க்கும் மேற்பட்ட உரல் போன்ற குழிகள் காணப்படுகிறது. ஏற்கனவே, 1990ம் ஆண்டு படவேட்டில் உள்ள அம்மையப்ப […]