Union Cabinet approved : உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். Read […]