அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது தொடர்பான பரிந்துரைகளை நேற்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை […]