இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க […]
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், யுடியூபர் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வலக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, நாட்டில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கியுள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். எனவே, யுடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழிமுறைகள் தேவை என தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியை சேர்ந்த காமராஜ் என்ற சின்னதுரை மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் நகராட்சியாக மாற்றப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் பட்டியலின மக்கள் 5,760 பேர் உள்ளனர். ஆனால், […]
சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில், தற்போது வரை விசாரணை எந்த நிலையில் உள்ளது? விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? என நீதிபதி கேள்வி. சாத்தான் குளத்தில் போலீஸ் காவலில் வைத்து, தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, இந்த […]
முதல்வரின் பணியை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை. மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசி யூ டியூபர் சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால், அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அரசு தரப்பில் மனு […]
மதுரை:ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் உடலை மறுஉடற்கூராய்வு செய்வதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் […]
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.100 பக்கங்களை கொண்ட அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு […]
மதுரை:பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. பேரரசர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையில்,இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், “கடந்த 2019 ஆம் ஆண்டு நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக பொதுக்கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்து உண்மைகள் சிலவற்றை […]
மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி […]
தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, ஒருதுறையின் மீது குற்றம் சுமத்தும் போது, அந்த துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா […]
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி. பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்க கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 50 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வழக்கு போதை தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கும், அதற்கு கீழான வழக்குகள் அந்தந்த […]