உத்தர பிரதேசத்தில் உள்ள ஜிபி நகரில் ஜனவரி 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, கௌதம் புத்த நகரில் (ஜிபி நகர்) கொரோனா வைரஸ் தடுப்பிற்காக போடப்பட்ட தடை உத்தரவை தொடர்ந்து நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் 144 தடை உத்தரவானது வரும் வருடத்தில் ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட இந்த […]
உ.பி.யில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் காயம். உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 64 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர் எனபதோஹி டிஎம் கவுரங் ரதி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் […]
தலித் மாணவர் மரணம் தொடர்பாக உ.பி.யின் அவுரியாவில் வன்முறைப் போராட்டம். ஆசிரியர் தப்பி ஓடியதாக குற்றம் சாட்டு. உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தலித் மாணவர்(15) தேர்வின் போது ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்ததால், ஆசிரியரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை போராட்டங்கள் நடந்தன. வன்முறை போராட்டத்தின் போது தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் பதிவாகி, இரண்டு போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் […]
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து,வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல்ராஜ் சர்மாவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI கூறுகையில்:”உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.அதன்பின்னர்,வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் இது தொடர்பான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு காவல் நிலையங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி பின், சட்டவிரோதமாக உள்ள ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்பொழுது உத்தர பிரதேச முதல்வர் […]
உ.பி:’உங்களுக்கு இடமாற்றம் வேண்டுமானால் உங்கள் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள்’ என்று கேட்ட அதிகாரியால் மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்,தனது மனைவியை ஒரு இரவுக்கு அனுப்புங்கள் என்று கூறிய பொறியாளரின் வீட்டிற்கு வெளியே மின் கழக ஊழியர் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார். உபி காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி,லக்கிம்பூரின் மின்துறையில் பணிபுரியும் மின் ஊழியரான கோகுல் (42) என்பவர், வேலைக்கு சென்று வர தனக்கு அதிக நேரம் […]
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக(UP CMO) ட்விட்டர் கணக்கு சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டது.உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் புகைப்படம் கார்ட்டூனிஸ்ட் குரங்காக மாற்றப்பட்டு, “How to turn your BAYC/MAYC animated on Twitter” என்ற டுடோரியலில் அந்த இடுகை வெளியிடப்பட்டதால் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் வெளிச்சத்திற்கு வந்தது.இருப்பினும்,தற்போது கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு 4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நிலையில்,ஹேக் செய்யப்பட்ட உபி சிஎம்ஓ […]
உத்தரப் பிரதேசம்:லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உ.பி.காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.அதன்பின்னர்,நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். […]
உத்தரப்பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் 3-நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். இன்று உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தை […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 63 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரோசாபாத் மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் 63 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு டெங்கு நோய்க்கான சிகிச்சையின் போது 12 வயது சிறுமி உயிரிழந்ததாக தகவல் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு தினமும் 11 ஆம் வகுப்பு மாணவி படகு ஓட்டி செல்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையால் பஹ்ராம்பூரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வேறு வழியின்றி பள்ளிக்கு தினமும் பள்ளி சீருடையில் 800 மீ தொலைவு படகு ஓட்டி சென்று படித்து வருகிறார். இது குறித்து அம்மாணவி தெரிவித்துள்ளதாவது, பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக […]
உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 105 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. உத்திரபிரதேசம் பிரசோபாத் மாவட்டத்தில் 40 சிறார்கள் உட்பட இதுவரை 50 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசோராபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 105 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் […]
உத்தரப்பிரதேசத்தில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாப்பிடும் ரொட்டிகளில் விஷம் கலந்து நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவற்றை சாப்பிட்ட 20 நாய்கள் தற்போது உயிரிழந்துள்ளது. மேலும், இது குறித்து பசௌரா கிராமத்தின் தலைவர் சுக்நந்தன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு உணவில் விஷம் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 50 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் 50 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 55 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 36 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் […]
ஆக்ராவில் போலியான மது அருந்திய 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஆக்ரா காவல் ஆணையர், ஆக்ராவில் போலியான மது அருந்தியுள்ள 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை படி, அவர்களது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்த மீதம் உள்ள இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மதுராவில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்து பலரிடம் பரவி வரும் நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் மர்ம நோய் ஏற்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த வாரத்தில் 5 குழந்தைகள் உட்பட […]
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் விழா மேடை சரிந்து விழுந்து பாஜக நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது உத்திரபிரதேச மாநிலத்தின் சம்பல் நகரில் ப.ஜ.க நடத்திய நிகழ்ச்சியில் மேடை ஒன்று போடப்பட்டிருந்தது. அந்த மேடை சரிந்து விழுந்து நிர்வாகிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையையொட்டி விவசாயிகள் அணி பங்குபெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பாஜக முக்கிய நிர்வாகி பேசிக்கொண்டிருந்தபோது […]