உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை ஏற்றி சென்று கொண்டிருந்ததாக டிராக்டர் உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள குளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் கஸ்கஞ்சில் உள்ள பாட்டியாலி தரியாவ்கஞ்ச் என்ற சாலையில் காலை 10 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர […]
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எஸ்பிஐ வங்கியில் சுரங்கம் தோண்டி 1.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) எஸ்பிஐ வங்கியில் 1.8 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது. இதற்காக அந்த கும்பல் வங்கிக்கு அருகே சுமார் 10 அடிக்கு சுரங்கம் தூண்டியுள்ளது. 8 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் தோண்டி அதன் மூலம் வங்கிக்குள் நுழைந்த மர்ம கும்பல் அங்கு லாக்கரில் இருந்த 1.8கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதன் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இஸ்லாமிய பாடல் பாடிய விவகாரத்தில் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட். உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் காலையில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் அசெம்பிளியின் போது, மாணவர்கள் அல்லாமா இக்பால் என்று அழைக்கப்படும் முஹம்மது இக்பால் என்பவரால் எழுதப்பட்ட இஸ்லாமிய பாடலை பாடியுள்ளனர். இந்த அசெம்பிளி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து, உள்ளூர் இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதில், பள்ளியில் இஸ்லாமிய […]
உ.பி.யில் 32 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு 32 வயது நபரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நோயாளியிடம் மருத்துவர் டாக்டர் ராகேஷ், நீங்கள் ஸ்பூன் சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது, அந்த நபர் ஒரு வருடமாக சாப்பிட்டு வருகிறேன் என்று நோயாளி கூறியதாக, மருத்துவர் தெரிவித்தார். […]
கன மழைக்கு மத்தியில் உ.பி.யின் எட்டாவாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பலி, 2 பேர் காயம். உத்தரபிரதேசத்தின் எட்டாவாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார், என முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹரில் ஒரு தையல் ஷோரூமின் உரிமையாளர் அன்சாரி, நுகர்வோர் நீதிமன்றத்தால் ‘பொருத்தமற்ற குர்தா பைஜாமா’ தையல் செய்ததற்காக 58 வயதான சிங், என்ற நுகர்வோருக்கு ரூ. 12,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் நிவாரண ஆணையத்தின் உதவி தகவல் அதிகாரி சேகர் வர்மா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவருக்கு பல அறிவிப்புகள் வழங்கப்பட்டன, ஆனால் அவர் ஒருபோதும் விசாரணைக்கு வரவில்லை, இதனால் இந்த வழக்கு நான்கு ஆண்டுகள் […]
வார்டுகளின் பெயர்களை மாற்றுவது எல்லை நிர்ணய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இதன் கீழ் கோரக்பூரில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது, இவற்றில் பல பிரமுகர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரால் பெயரிடப்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், இஸ்மாயில்பூர் (சஹாப்கஞ்ச் என மாற்றப்பட்டுள்ளது) கார்ப்பரேட்டருமான ஷஹாப் அன்சாரி, பெயர்களை மாற்றுவது துருவமுனைக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர் தலாத் அஜீஸ், பெயர் மாற்றுவது பணத்தை வீணடிக்கும் செயலாகும். “இதன் மூலம் அரசாங்கம் […]
உத்தரபிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த அடுக்குமாடி பேருந்து மீது வேகமாக வந்த டிரக் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். ராமநகர் காவல் நிலையப் பகுதியில் இன்று(செப் 3) அதிகாலை 3:30 மணியளவில் நேபாளம்-கோவா பேருந்து பஞ்சரான டயரை மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த அடுக்குமாடி பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்தின் போது 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும் அதில் 4பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அதிக அளவிலான ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுவரும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து […]
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பையில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரிகள் இளம்பெண்ணின் சட்டைப்பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவது காண்பிக்கப்பட்டுள்ளது.
உ.பி:ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்த நிலையில்,இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ளனர்.மேலும்,இந்த உருமாற்றம் அடைந்த வைரஸிற்கு ஒமைக்ரான் […]
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) அமல்படுத்தப்படவுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் .அப்போது,ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும்,இரவு […]
பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் தனது வீட்டின் முன் ஒரு குறுகிய தெருவில் சிவப்பு மற்றும் நீல அலங்கார விளக்குகள் எரிகிறது. அப்போது ஒரு பெண் நடனமாடி கொண்டே பொது இடத்தில் கையில் துப்பாக்கியுடன் வானத்தை நோக்கி சுடுகிறார். இந்த வீடியோ ட்விட்டரில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோவை அடிப்படையாகக் […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். PM Narendra […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில்,எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 3 பெரிய நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த திங்கள்கிழமை மாலை கோரக்பூர் வந்தடைந்த யோகி ஆதித்யநாத், பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு […]
உத்தரப் பிரதேசத்தில் குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பாஜக தலைவரின் மனைவி உயிரிழந்தார். உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனில் குமார் சவுகானின்,மனைவி குரங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 50 வயதான சுஷ்மா தேவி, கைரானா நகரில் உள்ள அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.அப்போது,அவரை ஒரு குரங்குக் கூட்டம் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.இதனால்,குரங்குகள் […]