UKMSSB: உத்தரகாண்ட் மருத்துவ சேவை தேர்வு வாரியம் (UKMSSB) பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் என காலியாகவுள்ள மொத்தம் 156 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில அரசு மருத்துவக் கல்வித் துறையில் காலியாக உள்ள 53 பேராசிரியர் பணியிடங்களும், 103 இணை பேராசிரியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்துவிட்டு மருத்துவ சேவை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UKMSSB என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி […]
Co-operative Bank: உத்தரகாண்ட் கூட்டுறவு நிறுவன சேவைகள் வாரியம், கிளார்க்-கம்-கேஷியர், ஜூனியர் கிளை மேலாளர், மூத்த கிளை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மேலாளர் என மொத்தம் 233 பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ www.cooperative.uk.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான முக்கியமான தேதிகள் பின்வருமாறு, கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 01-04-2024 அன்று தொடங்குகிறது. READ […]
உத்தரகாண்ட் மாநில ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி பகுதியில் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்லாமியர்கள் வசித்து வந்த பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமானது என கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் நீதிமன்றம் அறிவித்தது. இதனால், அங்கிருந்து அனைவரும் காலி செய்யவேண்டும், இல்லையென்றால் […]
இன்று தமிழகத்தில் தை அமாவாசை வழிபாடு கடைபிடிக்கப்டுகிறது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடைசி நாள் இன்று நடைபெற உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை நதியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. தங்கள் மகனுக்குப் ரத்த புற்று நோய் வந்ததைக் குணப்படுத்த கங்கை நதியில் ஐந்து நிமிடம் மூழ்கினால் ரத்த புற்றுநோய் தீரும் என்ற மூடநம்பிக்கையால் அந்த 7 வயது சிறுவனை கங்கை நதியில் மூழ்க வைத்துள்ளனர். இதனால் சிறுவனின் உயிர் பரிதாபமாக பறிபோனது. உயிரிழந்த அந்த சிறுவனின் பெற்றோர் கங்கை நதியின் கரையில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர், அவரது அத்தை, சிறுவனை அழைத்து […]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 14 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பே இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. […]
இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு அருகே மிகப்பெரிய பனிச்சரிவு-வைரலாகி வரும் வீடியோ.. உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்குப் பின்னால் இன்று(அக் 1) காலை பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் இந்த பனிச்சரிவால் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோயில் கமிட்டி தலைவர் கூறுகையில், கேதார்நாத்தின் பின்னால் உள்ள ஒரு பெரிய பனிப்பாறை தற்போது இரண்டாவது முறையாக உடைந்து ஆறு போல் பெருக்கெடுத்து […]
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக,நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும்,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதியில் புஷ்கர் தோல்வி அடைந்திருந்தார்.இதனால்,அவர் பதவி விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து,புஷ்கர் தாமிக்காக,மாநில சட்டசபைக்கான புதிய முயற்சிக்கு வழி வகுக்கும் வகையில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கைலாஷ் கெஹ்டோரி,தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும், தாமிக்காக பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரகாண்ட் […]
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக,நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும்,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதியில் புஷ்கர் தோல்வி அடைந்திருந்தார்.இதனால்,அவர் பதவி விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து,புஷ்கர் தாமிக்காக,மாநில சட்டசபைக்கான புதிய முயற்சிக்கு வழி வகுக்கும் வகையில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கைலாஷ் கெஹ்டோரி,தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும், தாமிக்காக பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரகாண்ட் […]
உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மாதம் ஒன்றுக்கு 31% வீதம் உயர்த்தி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் அரசின் அறிவிப்பின்படி, அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.டிஏ உயர்வு என்பது மாநில அரசு ஊழியர்களின் மொத்த சம்பள உயர்வையும் குறிக்கும். உத்தரகாண்ட் அரசு தனது அறிவிப்பில், “ஏழாவது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அனுமதிக்கப்படும் மாநில அரசின் அரசு ஊழியர்களுக்கு, 2021 ஜூலை 1 முதல், மாதத்திற்கு 31% அகவிலைப்படி […]
உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார்,இதனையடுத்து,ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே,தனது மாமியாருடன் நடந்து சென்றபோது தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும்,மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் அண்டை வீட்டாரான சவீதாவின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,தனது வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தை சேர்ந்த சாகிசைன் எனும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு வட்ட அதிகாரி பிரேம் லால் தம்தா கூறுகையில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவருக்கு பலத்த காயம் கூறியுள்ளார். மேலும், பலத்த காயமடைந்த இருவரும் […]
தினமும் 10 கிலோமீட்டர் ஓடி வீட்டிற்கு செல்லும் இளைஞரின் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. நொய்டாவில் ஒரு வாலிபர் தனது தோளில்பையை மாட்டிக்கொண்டு சாலையில் ஓடுகிறார். எழுத்தாளரும், இயக்குனருமான வினோத் காப்ரி தனது காரில் வா நான் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் அந்த வாலிபர் வேண்டாம் என கூறி விட்டு தொடர்ந்து ஓடுகிறார். அவரது பெயர் என்ன என்று கேட்டபோது, பிரதீப் மெஹ்ரா என்று கூறினார். ஏன் இப்படி ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு […]
உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில்பாஜக அமோக வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில், தர்மேந்திர பிரதான் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதி டேராடூன் செல்லவுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு மறுநாள் உத்தரகாண்டில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறலாம் என்றும், அதில் முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் […]
உத்தரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குன்னூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து,13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ […]
உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நேற்று தீபாவளியை ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதனை தொடர்ந்து, இன்று உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, கேதார்நாத்தில் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து அவர், உத்திரகாண்டில், பல்வேறு நலத்திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும், 2013 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆதிசங்கராச்சாரியாரின் சிலை […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து மீட்பு படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த சக்ராத் பகுதி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று மாலை 3.40 மணியளவில் அங்குள்ள பிதோரோகார்க் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 82 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறும் சார் தாம் யாத்திரைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சார் தாம் யாத்திரை என்பது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய நான்கு கோயில்களுக்கும் யாத்திரை செல்வது ஆகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்த யாத்திரையை நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்தது. இது குறித்து இன்று உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், சார் தாம் யாத்திரை மீதான தடையை நீக்கி கொரோனா நெறிமுறைகளுடன் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதித்துள்ளது. […]
நாடுமுழுவதும் செல்போன் இன்டர்நெட் சேவைகளை பெறுவதற்காக நகர்ப் பகுதிகள் ஆங்காங்கே செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்படுகிறது. தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் செல்போன் டவர்கள் அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். மேலும் செல்போன் இன்டர்நெட் இணைப்புகள் சரிவர கிடைப்பது இல்லை. இது போன்ற பகுதிகளில் பயன்படுத்துவதற்கு மும்பை ஐ.ஐ.டி. காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன்-இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதியை கண்டுபிடித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்களுக்கு இதன் மூலம் […]