நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது.அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]