ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற உயர்கல்வித்துறை உத்தரவு. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, […]
கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தகவல். தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். இதனிடையே, தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் […]
சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை வழங்குவதில் பார்வை மாற்று திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பிற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது போல ஒரே மாதிரியான தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், அன்றாட செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரு நியாயமான தொகையை வழங்க வேண்டும் என்றும், கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த […]
தமிழகத்தில் ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1,500 -லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க நிர்வாக ஒப்புதல் மற்றும் ரூ.31,07,91,000 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான பதிலுரையில் 07.01.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை குறித்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது: “கடுமையான இயலாமை, கடுமையான அறிவுசார் குறைபாடு, […]
கோவாவில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில்,கோவாவில் வேலைகள் மற்றும் வேலையின்மை நிவாரணம் பற்றி முக்கிய அறிவிப்புகளை டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார். Hon’ble Delhi CM […]
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரிசன் வட்டம் கிராமம். இந்த கிராமத்தில் யார் ஆதரவின்றி வசித்துவரும் 90 வயது மூதாட்டி சென்னி. இவர் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தின் முலம் மாதம் 1000 ரூபாய் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்காக இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் வேலூர் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் […]