LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமும் நிறைவடைந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதனால், பிரச்சார நேரம் நிறைவடைந்ததும் தொகுதி சாராத ஆட்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் […]
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ரூ.11.98 கோடி மதிப்பில் உள்ள சென்னை மாநகராட்சி சார்பில் நிறைவுற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்ததோடு, ரூ.152.67 கோடி மதிப்பில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இந்த விழாவில் கலந்து […]
தமிழக துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமைச்சர்கள்,திமுக பிரதிநிதிகள், பிற கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாந்தி நினைவிடம், அறிஞர் அண்ணா […]
வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது என வானதி சீனிவாசன் அறிக்கை. பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த திரு கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள திரு. மு.க.ஸ்டாலினின் மகனுமான திரு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் […]
ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி என ரஜினிகாந்த் பேட்டி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் அவர்களின் தாயாரை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து […]
தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்! என உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் கீ.வீரமணி. புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர். அந்த வகையில், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் இன்று ‘திராவிட மாடல்’ […]
திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என சசிகலா அறிக்கை. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றது குறித்து விமர்சித்து, வி.கே.சசிகலா திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், அதிமுக எளிய தொண்டரையும் பதவி கொடுத்து அங்கீகரிக்கும் கட்சி; நானும் இதைப் பின்பற்றித்தான் இதுநாள் வரை வந்து இருக்கிறேன்; எனவே நாங்கள்தான் உண்மையான திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க மிக பெரிய […]
உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சராக பதவியேற்ற பின், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவை ஈபிஎஸ் புறக்கணித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் […]
பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என உதயநிதி ட்வீட். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராக பதிவியேற்றுள்ளார். அவர் பதவியேற்பதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்.’ […]
புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன் என தமிழிசை பேட்டி. திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்து கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு இப்போது தேவை […]
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். அவர் அமைச்சராக மிகவும் சிறப்பாக செயல்படுவார். முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது. 30 வருடம் கழித்து அமைச்சர் பதவி கொடுத்தாலும் விமர்சிக்க தான் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி. ஸ்டாலின் தனது கனவை நினைவாக்கிக் கொண்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் திமுக என்பது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி. ஸ்டாலின் தனது கனவை நினைவாக்கிக் கொண்டுள்ளார். […]
உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர் என அமைச்சர் முத்துசாமி புகழாரம். அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார். அப்போது பேசிய அவர், உதயநிதி எந்த பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு சொல்லக்கூடியவர்; என்ன செய்தாலும் சிறப்பாக செய்வார் எனும் நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் உள்ளது. இனிமேல் ஒரு கட்டடம் கூட அனுமதி இல்லாமல் கட்டப்படாது என உறுதியளிக்கிறோம்; ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ்-க்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது என ஈபிஎஸ் பேச்சு. திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரையாற்றியுள்ளளார். அப்போது பேசிய அவர், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்; திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது. நான் ஒரு விவசாயி, மழையையும், வெயிலையும் […]
அதிமுக பாஜக காலடியில் நிற்காது, பாஜக தான் மற்றவர்கள் காலடியில் நிற்கும் என்று சீமான் பேட்டி. 2017-ல் சேலம் பொது கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமானிடம், உதயநிதி அமைச்சரானால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி முதலமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக […]
கள்ளக்குறிச்சியில் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ஓபிஎஸ் ஈபிஎஸ் போல இருக்கக்கூடாது என அறிவுரை. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் அங்கு மணமக்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர் மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். யாரைப் போல வாழக்கூடாது என்றால், ஓபிஎஸ் ஈபிஎஸ் போல […]