முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊட்டியில், முன்னாள் முதல்வர் ராஜீவ் 31-காந்தியின் வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். நவீன உதகை நகரம் மற்றும் உதகை ஏரியை உருவாக்கிய ஜான் சல்லிவன், நீலகிரியின் […]
உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில்,இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் […]
உதகை:ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,உதகையில் இன்று ஒரு நாள் கடைகள் அடைப்பு. நேற்று முன்தினம் பிற்பகல் குன்னூரில் காட்டேரி என்ற பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து,நேற்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவ விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக […]
நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது. , காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை முடிந்துள்ள நிலையில், உதகையின் மணி மகுடமாகத் திகழும் தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. 1 லட்சம் மலர்களைக் கொண்டு மேட்டூர் அணை, 3500 மலர்களைக் கொண்டு பார்பி டால், 300 கிலோ வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு வள்ளுவர் கோட்டம் போன்றவற்றின் மாதிரிகளை […]