நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, ‘போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே காரணம்’ என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார். […]