உக்ரைனில், ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் தகர்த்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவில் 23 ட்ரோன்கள் மூலம் தன்னிச்சையாக வெடிக்கும் விமானங்களை அனுப்பி தாக்கியுள்ளது. இதில் 18 ட்ரோன் விமானங்களை சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் சில அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக உக்ரைன் மீது ரஷ்யாவால் இதுவரை இல்லாத, ஒரேநாளில் 70 க்கும் மேற்பட்ட […]
உக்ரைனின் மீது ரஷ்யப்படைகள் மீண்டும் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யப்படைகள் கிட்டத்தட்ட 60 ஏவுகணைகளை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. மத்திய உக்ரைனில் ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உக்ரைனின் இரண்டு பெரிய நகரங்களான கிய்வ் மற்றும் கார்கிவ் ஆகியவற்றில் மின்சாரம் மற்றும் நீர் சேவைகள் தடைபட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், தங்குவதற்காக ஆழமான சுரங்கப்பாதை நிலையங்களை தேடி விரைந்தனர். […]
உக்ரைனில் மின்சாரம் இல்லாத பகுதிகளில், மக்களுக்காக பழைய கார் ரிம்களில் இருந்து அடுப்புகள் தயார் செய்யப்படுகின்றன. ரஷ்யா-உக்ரைன் போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைனின் மின் நிலையங்களை ரஷ்ய ஏவுகணைகள் குறிவைத்து அளித்தன. இதனால் உக்ரைனின் பெரும்பாலான பகுதியில் மின்சாரமானது தடைப்பட்டது. மின்சார தடையால் மக்கள் அனைவரும் இருளிலும் மற்றும் கடும் குளிரிலும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்பொழுது அவர்களுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் இருளில் தவிக்கும் மக்களுக்காக லிதுவேனியா நாட்டின் நிறுவனம் கார்களில் உள்ள பழைய ரிம்களிலிருந்து […]
உக்ரைன் அதிபரின் மனைவியை சந்தித்த அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன். ரஷ்யா உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு பல நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவிசாய்க்காமல் ரஷ்யா தனது போரைத் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், […]
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ், ஹிட்லரின் உடலிலும் யூத இன ரத்தம் கலந்திருக்கலாம் எனபேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. கடந்த அறுபது நாட்களுக்கும் மேலாக உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது ஒரு புதிய சர்ச்சையில் அவரை தள்ளியுள்ளது. ரஷ்யா பல வருடங்களாகவே உக்ரைன் அதிபரான விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆட்சியை குறித்து ஹிட்லரின் ஆட்சியோடு ஒப்பிட்டு பேசி வருகிறது. இந்த நிலையில் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையின் போது, இருதரப்பு உறவு, ரஷ்யா – உக்ரைன் விவகாரம், இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவும், இந்தியாவும் உலகின் மிகச்சிறந்த ஜனநாயக […]
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே படையை குறைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி […]
வாடிகனில், ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக மோதலுக்கு வழிவகுத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகள் தயாரிக்கப்பட்டதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்று ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது.மேலும்,ரஷ்யா வழியாக இடம்பெயரும் பறவைகளை வைரஸ் சுமக்கப் பயன்படுத்துவதாகவும் உக்ரைன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில்,எந்தவொரு இரசாயன அல்லது பிற பேரழிவு ஆயுதங்களும் தங்கள் நாட்டில் உருவாக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதில் அளித்துள்ளார். மேலும்,இது […]
கடந்த 24-ஆம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை அடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான […]
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள இர்பின் நகரில் மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு முன்னதாக ரஷ்யா, மருத்துவமனைகள், தேவாலயங்கள் […]
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாணவர்களை மீட்பதற்கான […]
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே துறைமுக நகரமான கெர்சன், எனர்க்கோடர் நகரங்களை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியிருந்த நிலையில் தற்பொழுது, தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் […]
உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக பல நாடுகள் தடை விதித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில், போயிங் நிறுவனம் மனிதாபிமான நிதியாக ரூ.15.23 […]
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யர்கள், ரஷ்ய அரசின் சொத்துக்களை […]
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான இரண்டாம் […]
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், […]
ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு 2000க்கும் மேற்பட்ட உக்ரேனிய பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரேனிய அவசர சேவை மையம் அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா […]
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலின் போது இந்திய மாணவர் ஒருவர் இறந்ததை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்தது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில், உக்ரைனில் உள்ள தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய படைகள் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் […]