உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி,ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் ராணுவப் படையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக தரை,வான் வழியாக ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனை கொடூரமாக தாக்கி வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். எனினும்,18 முதல் 60 வயது வரையுள்ள உக்ரைன் ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு […]