2023 ஆம் ஆண்டின் சார்லமேன் பரிசுக்கு உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சார்லமேன் பரிசுக்கு உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் மக்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மன் பரிசுக் குழு தெரிவித்தது. ஜெர்மனியின் ஆச்சென் நகரம், ஐரோப்பிய ஒற்றுமைக்கான பங்களிப்புகளுக்காக வழங்கும் இந்த சார்லமேன் பரிசு நேற்று ஜெலன்ஸ்கிக்கு வழங்கப்பட்டது என்று கூறியது. ஐரோப்பிய ஒற்றுமைக்காக ஆற்றிய பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் உக்ரைனின் […]
உக்ரைன் மீது தொடர்ந்து 55-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில்,உக்ரைனின் கிழக்கு பகுதியைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயல்வதாகவும்,எத்தனை ரஷ்ய படைவீரர்கள் வந்தாலும்,நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வீடியோ வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி:”ரஷ்யப் படைகள் டான்பாஸிற்கான போரைத் தொடங்கிவிட்டன,அதற்காக அவர்கள் நீண்ட காலமாகத் தயாராகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் கணிசமான அளவு ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு தாக்குதலை நடத்த கவனம் செலுத்துகின்றன. ஆனால்,அவர்கள் எத்தனை ரஷ்ய படைவீரர்களை அந்தப் […]
ரஷ்யா மற்றும் உக்ரைனில் தொடர்ச்சியாக போர் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட தெற்கு உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் நாட்டின் மீது ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். எனவே, இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பேச்சுக்களைக் கூட தடுக்கும் வகையில் ரஷ்யா மீது வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் […]
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது. இந்த நிலையில், வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது. வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ருங்கடலில் முக்கிய நகரமான ஒடேசாவின் துறைமுகத்தை தாக்க ரஷ்யா முயற்சிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிட்ஸ்யா விமான […]
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், காணொளி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைன் உள்ள அரசன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. கருங்கடலில் முக்கிய நகரமான ஒடேசாவின் துறைமுகத்தை தாக்க ரஷ்யா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், […]
இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் உக்ரைனின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்டறிந்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த […]
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைனில் சிறையில் உள்ள கைதிகளுக்கு ராணுவ அனுபவம் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய தயார் என்றும், ஆனால் ஒரே நிபந்தனை விடுதலை செய்யப்படும் கைதிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் […]
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த […]