கனடா பாஸ்போர்ட் வைத்திருக்கும் அந்நாட்டு குடிமக்களுக்கு இ-விசா வசதியை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. கனடா நாட்டு குடிமக்களுக்கு, இந்தியாவிற்கு வருவதற்கான இ-விசா வசதியை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் கனேடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இ-விசா வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை இந்திய உயர் ஆணையம், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த நடைமுறை டிச-20, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. […]