5 ஆண்டு கால இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
இந்தியா சார்பில் 156 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் 5 ஆண்டு கால இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.அதன்படி,அமெரிக்கா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு கால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.மேலும்,வழக்கமான சுற்றுலா விசா சேவைகளையும் மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து விசாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு,கவிசா விதிமுறைகளை […]