முஸ்லிம்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், இதற்கு மூளையாக செயல்பட்டவர்களையும் உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. தேனிமாவட்டத்தில் இஸ்லாமியர்களின் மத வழிபாடான தொழுகைக்குச் சென்று வந்த முஸ்லிம் மாணவர்களை தடுத்து நிறுத்தி, தொழுகைக்கு சென்ற இஸ்லாமிய மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்குள் செல்லக்கூடாது என்று இந்து முன்னணியினர் மிரட்டியதாகவும், அதே போல, சென்னை பகுதில், அரபி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 8ஆம் வகுப்பு […]
உலகம் முழுவதும் நாளை(ஜூலை 10) தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: ‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு நபிகள் நாயகம் […]
தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். பொதுவாக,இஸ்லாமியர்களின் காலண்டரில் 9-வது மாதம் ரமலான் மாதமாகும்.இந்த ரமலான் மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்களுக்கு நோன்பு இருப்பர்.இதில் அதிகாலை நேர தொழுகைக்கு முன்பாக உணவு உண்ணப்படுகிறது.அதனை தொடர்ந்து மாலை 6 வரை நோன்பு நோற்பவர்கள் தண்ணீர் கூட பருகுவதில்லை. இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை காஜி சலாவுதீன் […]