இந்தியா விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளின் சாதனை பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. அந்தவகையில், குறிப்பாக கடந்தாண்டு அனைவருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை புரிந்தது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தையும், தென் துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் முதல் இடத்தையும் பதிவு செய்தது. சந்திரயான் 3 வெற்றி உலக […]
கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. மற்றொரு மைல்கல்லை எட்டிய இந்தியா! எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்! அதன்படி, […]
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு […]
ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியின் அருகே திட்டமிட்டபடி இன்று மாலை நிலைநிறுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. முதல் முறையாக இஸ்ரோ, சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian […]
ஜனவரி 1ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட 11 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என கூறப்பட்டது. இது பூமியில் இருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் புவி வட்டார சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் […]
புத்தாண்டு தினமான இன்று இஸ்ரோவின் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் உள்ளிட்ட 11 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பப்பட்டது. 11 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி – […]
2024 புதிய ஆண்டு தொடக்கத்திலேயே ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள் இன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 10 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள், நெபுலா போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் […]
இந்தியா, 2024 ஆண்டின் முதல் நாளான இன்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. கேரளா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட வெசாட் செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது. மேலும், வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. செயற்கைகோள் 500-700 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்த பட உள்ளது. விண்வெளியில் உள்ள தூசு, நெபுலா, கருந்துளை உள்ளிட்டவற்றை […]
நாளை அதாவது ஜனவரி 1 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டின் முதல் நாளாகும். இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டின் முதல் நாளிலேயே பிஎஸ்எல்வி சி-58 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் நாளை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் “எக்ஸ்போசாட்” என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. கேரளா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட வெசாட்செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை குறித்து ஆய்வு […]
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் சாதனை படைத்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றியை தொடர்ந்து, கடந்த செப்.2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, ‘பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட்’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர், பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருக்கக்கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு, 648 கி.மீ உயரத்தில், ஆதித்யா-எல்1 […]
கடந்த 5 வருடத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக இந்திய அரசு தகவல். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கிடையே வணிக ஒப்பந்தத்தின் கீழ் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே3 ஏவுகணைகள் […]
இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து இன்று காலை 11.56க்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, பூடான் உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கை கோள்களும், இந்தியாவை சேர்ந்த செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு தரிசனம் செய்தனர். நாளை காலை 11.56க்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, பூடான் உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கை கோள்களும், இந்தியாவை சேர்ந்த செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்ட உள்ளன. இதனை ஒட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி […]
இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயற்கைக்கோள்களை வடிவமைத்து, ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது. இந்த நிலையில்,ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட், மூன்று ராக்கெட்களை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று தனது முதல் புதிய ராக்கெட், சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (எஸ்எஸ்எல்வி-டி1) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் (ஈஓஎஸ்-02) மற்றும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆசாடிசாட் ஆகியவற்றை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (எஸ்டிஎஸ்சி) ஏவியது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்”, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவர்களால் கட்டப்பட்ட 75 பேலோடுகளை உள்ளடக்கிய “ஆசாடிசாட்” என்ற எஸ்எஸ்எல்வி, இணை பயணிகள் செயற்கைக்கோள் […]
“இஸ்ரோவின் லோ எர்த் ஆர்பிட் (LEO), மனித விண்வெளி சுற்றுலாவிற்கான உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கான சோதனையில் உள்ளது” என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் தெரிவித்தார். தனியார் விண்வெளி நிறுவனங்களின் தோற்றம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்வெளி சுற்றுலா சந்தை கணிசமாக வளர்ந்து வருகிறது. எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் தற்போது இத்துறையில் முன்னணியில் உள்ளது. இதன் டிராகன் விண்கலம் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு கொண்டு […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ(DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்,என்இயு-சாட்(NeuSAR, SAR),ஸ்கூப் 1 என மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் இன்று( ஜூன் 30 ஆம் தேதி) விண்ணில் செலுத்த உள்ளது.அதன்படி,ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி53 விண்கலம் இன்று மாலை 6 மணிக்கு புறப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ(DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்,என்இயு-சாட்(NeuSAR, SAR),ஸ்கூப் 1 உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் நாளை( ஜூன் 30 ஆம் தேதி) விண்ணில் செலுத்த உள்ளது.அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி53 விண்கலம் மாலை 6 மணிக்கு புறப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை […]
இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி இஸ்ரோ இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம், இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை […]
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு இஸ்ரோ அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “இளம் விஞ்ஞானி” திட்டத்திற்கு ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Attention: Students of Class IX (as on March […]