இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் சமூக வலைத்தளம் மூலம் கெட்டுவிடாமல் இருக்க, ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படமால் இருக்க ராஜஸ்தான் காவல்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில், சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களில் செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இளைஞர்கள் ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படாமல் இருக்க மாவட்டந்தோறும் கவுன்சலிங் […]
நான் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை சந்தித்துள்ளேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னையில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இன்று நீங்கள் பெற்ற பட்டம் உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்தது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறீர்கள். பேஷன் அல்லது பேஷன் தொழில்நுட்பம் என்பது மனித இனப் பரிமாற்ற வளர்ச்சியில் பங்கு கொண்டது. அடுத்த 25 […]
தமிழகத்தில் இளைஞர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம். மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் இளைஞர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணியின் சார்பில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள், தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்கள், தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.C.N.மகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவுரைபடியும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர […]