ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டுள்ளது. 4 சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர்கள் சிநேக ப்ரியா, ஜமான் ஜமால், பிருந்தா […]