ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கவுந்தபாடியை சேர்ந்தவர் செல்வன், இதேபோல் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை இந்த செல்வன் காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் […]