நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ், அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆட்சியை அமைத்தது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகவும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். தெலுங்கானா அமைச்சரவையில், உத்தம் குமார் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, கோமாட்டிரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு, பொங்குலேடி […]