மானிய மின்சாரம் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு. அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். மேலும் தமிழ்நாட்டில் இப்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் […]
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ரூ.5157 கோடி வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு. அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு […]
விவசாய இணைப்புகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்,அதிமுக செய்தால் அது “ரத்தம்” திமுக மேற்கொண்டால் “தக்காளி சட்னியா”? என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு,மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் முதன் முதலாக […]