சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்கனவே 14 நாட்கள் விசா கொடுத்ததை தொடர்ந்து, அந்த விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அதனால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் காரணமாகவும் இலங்கையை விட்டு அவர் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். இலங்கையை விட்டு வெளியேறிய ராஜபக்சே, மாலத்தீவு மூலம், சிங்கப்பூர் பறந்துவிட்டார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை விரைவில் இலங்கை திரும்புவார் […]
கோத்தாபய ராஜபக்சே எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘ இலங்கை அரசுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன்’ என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு வெளியேற துடித்தனர். ஆனால், அதிபர் (முன்னாள்) கோத்தபய ராஜபக்சே மட்டும் தப்பித்து தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆனால் அவர் முறையாக தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் சென்றதால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. […]