இலங்கை போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் – மந்திரி சபை ஒப்புதல்..!
இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு இடையே கடந்த 30 ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தது. 2009-ம் ஆண்டு இந்த போர் முடிவடைந்தது. இதற்கிடையே, போர்க்காலங்களில் காணாமல் போனவர்கள், போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இலங்கை போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக, […]