இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும், சிலவை ஏற்றிக்கப்பட்டது. அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என இலங்கை அரசியல் […]
இலங்கை தலைநகர் கொழும்புவில், காலிமுக திடலில் போராடி வந்த போராட்டக்காரர்கள் முழுவதும் வெளியேறிவிட்டனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் வெடித்தது. பொதுமக்கள் , மாணவர்கள் என பல்வேறு போராட்ட குழுவினர் , கொழும்புவில் உள்ள காலிமுக திடலில் போராட்டம் ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த போராட்டம் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து , அரசு மாளிகையில் போராட்டம், முக்கிய தலைவர்கள் ஓட்டம் , அரசியல் மாற்றம் என அடுத்தடுத்து உலக நாடுகளை […]
இலங்கையில் போராட்டகாரர்களினால் அரசு அலுலகங்கள் , வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துகளைத் தாக்கி அழித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களாக அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாததனால் ராணுவத்திற்கு இந்த உத்தரவு […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை மக்களில் பலர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் அரசின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள […]