கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர்தான் காரணம் என்று கூறி அவரை பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,இலங்கையில் […]
இலங்கையில் ஆண்டு வருமானம் ரூ.200 கோடி ஈட்டுபவர்களுக்கு இனி 25% கூடுதலாக வரி விதிக்கப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில், இலங்கை வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவை முன்னாள் நிதி அமைச்சரான பசில் ராஜபக்சே தாக்கல் செய்த நிலையில்,இந்த மசோதா அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில்,வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா நாடாளுமன்றத்தில் […]
இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே […]
இலங்கை:இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இலங்கையில் அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால்,பால்,அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது. ஜனாதிபதி,பிரதமர் பதவி விலக வேண்டும்: இதன்காரணமாக,இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் […]