இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்கவும் வலியுறுத்தி இருந்தார். இந்த […]