இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக அங்குள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கண்டன குரல்களை எழுப்பி வந்தனர். சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் திருவுருவ சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி […]
இலங்கை CAA சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை. மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமைச்சட்டம் (CAA)-இன் படி, இஸ்லாமியர் அல்லத சிறுபான்மையினர் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014க்குள் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அந்த சட்டத்தின் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட 321 வீடுகளை திறந்து வைத்தார். திண்டுக்கல் தோட்டனுாத்துவில் ரூ.17.17 கோடி செலவில், இலங்கை தமிழர்களுக்காக 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த 321 புதிய வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தோட்டனுத்து, அடியனுத்து, கோபால்பட்டி ஆகிய 3 முகாம்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைத்து இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இலங்கை தமிழர்கள் நிரந்தர குடியிருப்பு குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த […]
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேதான் காரணம் என்று கூறி அவரை பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழகம் வரத்தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது என டிடிவி தினகரன் ட்வீட். பொருளாதார நெருக்கடி அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி வரத்து குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் […]
இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல. நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார். வேலூரில் அருகே மேல்மொனவூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் நடந்த விழாவில், இலங்கை தமிழர்களுக்காக முதல்கட்டமாக ரூ.142.16 கோடி செலவில் 3,510 புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும், மறுவாழ்வு முகாம்களில் ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை […]
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள், சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது என்றும், 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை. ஆனால் தற்போது மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் என்பது, […]
இலங்கை தமிழர் நலனில் பாரதிய ஜனதா கட்சி அக்கறையுடன் செயல்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருமைக்குரிய உண்மை: நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் நமது பிரதமர் மோடி என்பது பெருமைக்குரிய உண்மை. பிரதமர் இலங்கைக்குச் சென்றபோது, மலையகத் தமிழர்கள் (இலங்கையின் […]
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது: […]