இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது. பின்னர் ராஜபக்சேகள் ராஜினாமா செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் கடுமையாக உயர்ந்த விலை வாசியை கண்டித்து போராட்டங்கள் மீண்டும் வலுத்து வருகிறது. இலங்கை […]
2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு 13 வருடங்களாக இலங்கை சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் வீரர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் என இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே உறுதியளிதுள்ளார். இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு இடையேயும் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்த போரானது கடந்த 2009ஆம் ஆண்டு, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்த பின்னர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் […]
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே , அதிபராக வெற்றிபெற்றுள்ளார். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையில் 223 பேர் மட்டுமே வாக்களித்தனர். 2 […]
போராட்டக்காரர்கள் குவிந்ததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடியுள்ளார் என்று தகவல். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தடைகளை மீறி […]
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால்,பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சேவும்,பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று கூறி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து,பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ச […]