இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து,நேற்று நடைபெற்ற சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள், மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,இது […]