இலங்கையில் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார். காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க தான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மருத்துவர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டார். நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு […]