முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை. முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீபத்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.
சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் இன்று ஆலோசனை தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி, நீர் வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை […]
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வு காரணமாக தமிழகத்தில் பல்வேரு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையை சுற்றிய வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து முக்கிய ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை […]
வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட அனைத்து செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துத்துறை செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்பு. தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் […]
கோவை கார் வெடிவிபத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலர் இறையன்பு, உளவுத்துறை முக்கிய அதிகாரி, உள்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். […]
மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் உத்தரவு. பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பருவமழையின் போது, வெள்ள தேங்குவதை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பருவ மழை தொடங்கவுள்ளதையடுத்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், வருவாய், நகராட்சி நிர்வாகம், காவல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
உலகில் எந்த மூலையில் சிறப்பான விஷயங்கள் இருந்தாலும், அதை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின் என இறையன்பு தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் […]
மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை – தமிழக தலைமை செயலர் இறையன்பு. அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டால், ஏதேனும் முக்கிய தகவல்களை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டுமானாலும், ஒரு நபர் மூலம் தண்டோரா போட்டு, அறிவிக்கும் நடைமுறை இன்னும் சில இடங்களில் நடைபெற்று தான் இருக்கிறது. இது குறித்த முக்கிய தகவல் ஒன்றை மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை செயலர் இறையன்பு பகிர்ந்துள்ளார். அதில், மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை […]
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை. தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. அதில், சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானிகள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு […]
அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணி அளவில், அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பகல் 12 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக […]
பிரபுதேவா நடித்துள்ள குழந்தைகளுக்கான பேண்டஸி திரைப்படமான மை டியர் பூதம் படத்தில் கௌரவ தோற்றத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக, இயக்குனராக, நடிகராக பல்வேறு முகங்கள் கொண்டுள்ளார் பிரபு தேவா. இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அதில், அடுத்து வெளியாக உள்ள பெரிய திரைப்படம் என்றால் அது மை டியர் பூதம் திரைப்படம் தான். இதில் சூப்பர் டீலக்ஸ் திரைபடத்தில் விஜய் சேதுபதி […]
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து […]
தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு […]
கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம். கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜா கல்வி ரேடியோ இணையதளம் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் – கற்பித்தல் பயிற்சி வழங்கிவருவதற்கு பாராட்டு தெரிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இக்கட்டான கொரோனா தொற்று நோய் காலத்தில் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையில் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றிய ஆசிரியர் திரு […]
தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 2021 ம் ஆண்டு சிறந்த நூலாக தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய “மூளைக்குள் சுற்றுலா” தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு […]