தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை (Service Pension) குடும்ப ஓய்வூதியமாக (Family Pension) மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு,ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் […]
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில் ICMR வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வறுமையினால் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்து. பாதிக்கப்பட்ட […]