இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். இதைக்கவனித்த இந்திய ராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். […]
இந்தியா உலகின் 4-வது வலிமையான ராணுவத்தை உடைய நாடாக உருவெடுத்துள்ளது. உலக அளவில் 133 நாடுகளின் ராணுவ வலிமை குறித்த குளோபல் ஃபயர் பவர் இண்டக்ஸ் 2017 என்ற பட்டியல் வெளியிடட்ப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில், அமெரிக்காவும், 2-வது இடத்தில், ரஷ்யாவும், 3-வது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு பிந்தைய இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. […]
ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அரசுத் துறையினரால் சென்றடைய முடியாத இடங்களில் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ராணுவம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டமைப்பதில் முப்படைகளின் பங்களிப்பு என்னும் தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அரசுத் துறையினரால் சென்றடைய முடியாத பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கல்வி கற்பிப்பது, மருத்துவம் செய்வது ஆகிய பணிகளை ராணுவத்தினர் செய்து நாட்டின் கட்டமைப்புக்குப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார். ராணுவத்தினர் […]