தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஓமைக்ரான் பரவலால் பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அடையாறில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உலகம் […]
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான இன்று,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். […]
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக […]
சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு […]
நாளையிலிருந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால், அனைத்து மாநில அரசுகளுக்கும் இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை […]
ஓமைக்ரான் பரவல் 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதம் தென்ஆப்ரிக்காவில் ஒருவருக்கு ஓமைக்ரான் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவுவதற்கு ஓமைக்ரான் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட 5 […]
ம.பி மற்றும் உ.பி மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? கொரோனா வைரஸ் 2019-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மாற்ற நாடுகளில் பரவத்தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின் போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர், கொரோனா வைரஸ் குறையத்தொடங்கியது. இதனால், இந்தாண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் […]
கொரோனா காரணமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனிமேல் மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் […]