அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டமானது சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை நடைபெறவுள்ளது.இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதனால்,இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது என்றும் கூறி,பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி ஓபிஎஸ் கையெழுத்துடன் கூடிய மனு ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று கொடுக்கப்பட்டது. இந்நிலையில்,ஓபிஎஸ் கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது.பொது […]
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.அப்போது பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால்,தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,சென்னை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக,எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய […]